full screen background image

“தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறேன்” – நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பு

“தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறேன்” – நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பு

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம் தயாரித்துள்ள படம்  லைகர்’.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்  – பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா, பேனர்கள் – Puri Connects மற்றும் Dharma Productions, ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா, கலை இயக்கம் – ஜானி ஷேக் பாஷா, படத் தொகுப்பு – ஜுனைத் சித்திக், சண்டை பயிற்சி இயக்கம் – கிச்சா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 இதன் தமிழ் பதிப்பை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான R.K.சுரேஷ் தனது Studio 9 நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார்.

பட வெளியீட்டை ஒட்டி  இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கிண்டியில் உள்ள ரஹமத் பிளாஸா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R.K.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R.K.சுரேஷ் பேசும்போது, “விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்தப் படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

நாயகி அனன்யா பாண்டே பேசும்போது, “நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை  தமிழில் சொல்ல கற்றுக் கொண்டு வந்தேன். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “நான் தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா’ படத்தின்போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப் படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது.

நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா.ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். இந்த லைகர்’ பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி…” என்றார்.

Our Score