full screen background image

இசைஞானியின் 1001-வது படத்தில் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்..!

இசைஞானியின் 1001-வது படத்தில் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்..!

1977-ல் ரஜினி, கமல், ஸ்ரீதேவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா கூட்டணியில் வெளிவந்து அனைத்து தமிழ் ரசிகர்களாலும் இன்றளவும் பேசப்படுகின்ற ‘16 வயதினிலே’ திரைப்படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின்  மகன் மிதுன் குமார்  தமிழ்த் திரையுலகத்திற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவர் அறிமுகமாகும் படம் ‘களத்தூர் கிராமம்’.  மிதுன் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியிடம்  ‘தடையற தாக்க’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அதனை தொடர்ந்து  ‘16 வயதினிலே’ டிஜிட்டல் பதிப்பின் இயக்குனராகவும் பணியாற்றினார்.

இப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர், ஏக்னா செட்டி, ரஜினி மகாதேவய்யா, தருண் சத்ரியா மற்றும் பல முன்னணி கன்னட நடிகர்களும் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஜமீன் ஜாம். படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ். இசை – இசைஞானி  இளையராஜா. இசைஞானிக்கு இது 1001-வது படமாகும்.

இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை சரன்கே அத்வைதன் இயக்குகிறார். இவர் ‘சின்னத்தாய்’ படத்தின் இயக்குநர் கணேசராஜிடம் இணை இயக்குனராய் பணியாற்றியவர்.

இப்படத்தை ஏ.ஆர்.மூவி பாரடைஸ் சீனுராஜ் தயாரிக்கிறார் அவருடன்  சேர்ந்து ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களும்  இணை தயாரிப்பாளராக படத்திற்கு தோள் கொடுத்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாராகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் நடத்தவுள்ளனர்.

Our Score