ஜோ புரொடக்சன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “இளமி” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் ஹீரோவாக ‘சாட்டை’ யுவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பழனிபாரதி, ஜீவன்மயில், ராஜாகுருசாமி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு – யுகா
கலை – ஜான்பிரீட்டோ
தயாரிப்பு மேற்பார்வை – A . P.ரவி
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குனர் ரவி மரியாவிடம் இயக்கம் பயின்றவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….
“18-ம் நூற்றாண்டில் நடக்கும் மாதிரியான கதைக்களம்…. அந்தக் காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதைத்தான் இதில் கருவாக எடுத்திருக்கிறோம். படத்தில் ஜல்லிக்கட்டை அதிகமாக கையாண்டிருக்கிறோம். இதற்காக யுவன் சிக்ஸ் பேக் உடற்கட்டை ஜிமுக்கு சென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் மதுரை, தேனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது…” என்றார்..
பிராணிகள் நல வாரியத்தின் மீது பயமே இல்லையா ஸார்…?