full screen background image

வீரப்பன்-விஜயகுமார் மோதல் கதைதான் ‘இலக்கு’ திரைப்படம்..!

வீரப்பன்-விஜயகுமார் மோதல் கதைதான் ‘இலக்கு’ திரைப்படம்..!

பாடி எண்ட்டெர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் ரெட்டி தயாரித்து நடித்து இயக்கும் படம் ‘இலக்கு’.

இவர் ஏற்கெனவே ‘முதல் பாடல்’, ‘கலைக்கல்லூரி’, ‘பெருசு’ ஆகிய படங்களில் நடித்தவர். இவருடன் ‘உளவாளி’ படத்தில் நடித்த தேவி, சிரில் தாமஸ், கனி, ராகுல், ஸ்ரீதர், வளவன் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.

ராம்நாத் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.ஆர். சுபாஷ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். டி.ஜெ.குமார் வசனம் எழுதி இணை இயக்கமும் செய்திருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருக்கிறார். குன்றத்தூர் பாபு சண்டை பயிற்சியாளராக இருக்கிறார். மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன்.

“காவல்துறைக்கு மரியாதை தரும்வகையில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’, ‘வல்லரசு’, ‘வால்டர் வெற்றிவேல்’ போன்ற படங்களை போல இந்தப் படமும் காவல்துறைக்கு மகுடம் சூட்டுவது போல இருக்கும்…” என்கிறார் இயக்குநர் மதுசூதனன் ரெட்டி.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் மதூசூதனன் ரெட்டி, “2004-ம் வருடம் அக்டோபர் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பன், போலீஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதற்காக விஜயகுமார் தலைமையிலான குழுவை பாராட்டி தமிழக அரசு ஒரு விழா எடுத்தது.  அந்த விழாவில் விஜயகுமார் ஐ.பி.எஸ். பேசிய பேச்சு என்னை பெரிதும் கவர்ந்தது. அப்போதுதான் இந்தப் படத்திற்கான முதல் விதை என் மனதில் விதைந்தது.

ilakku-movie-stills-2

சந்தனக் கடத்தல் வீரப்பனின் உண்மையான வாழ்க்கைக் கதையை இந்தப் படத்தில் சித்தரித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான ‘வனயுத்தம்’ படத்தில் வீரப்பனின் வரலாறு, வளர்ச்சி அவர் அழிவு பற்றித்தான் படத்தில் சித்தரித்திருந்தார்கள்.

நானோ இந்த இருபது வருடங்களில் வீரப்பன் போலீஸ் பிடியில் இருந்து எப்படியெல்லாம் தப்பித்து ஓடி ஒளிந்தான். அந்த தப்பிக்கும் முயற்சிகளில் எத்தனை போலீஸார் இறந்தார்கள்.. என்பதையெல்லாம் இதில் ஒளிவுமறைவில்லாமல் காட்டியிருக்கிறேன்.

ஒரு போலீஸ் அதிகாரி வீரப்பனைப் பிடிப்பதற்காக மாறுவேடத்தில் சென்று வீரப்பனிடம் ஐக்கியமாகி அவனது கூட்டத்தில் ஒருவனாக இருந்தார். அவனைப் பிடிப்பதற்கான போலீஸ் தீட்டிய நாடகத்தில் இதுவும் ஒரு பங்கு. இதையும் இந்தப் படத்தில் காட்சியாக வைத்திருக்கிறேன்.

“போலீஸ் அவர்களது கடமையைத்தானே செய்தார்கள். இதிலென்ன பெரிய தியாகம் வேண்டிக் கிடக்கு…?” என்றார் ஒருவர். தீவிரவாதிகள் தங்களது சுயநலத்திற்காக செத்தார்கள். ஆனால் போலீஸ் அப்படியல்ல.. தங்களது கடமையைச் செய்யும்போது செத்தாங்க. காட்டுக்குள்ள வீரப்பனுக்கும், போலீஸுக்கும் நடந்த சண்டையில் எத்தனை பேர் இறந்தார்கள்..?

காட்டுக்குள்ள போனால் இறந்து போவோம்னு தெரிஞ்சே நம்ம தமிழ்நாடு போலீஸ் போனாங்க. காட்டுக்குள்ள சண்டை போடறதுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லை. அனுபவமும் இல்லை. காட்டுக்குள் சண்டையிடுவதற்கான பயிற்சிகள் எதுவுமில்லாமல் இருந்த்தால் சில போலீஸார் தாக்குதலில் இறந்து போனார்கள். இதையும் நேர்மையாக எனது படத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்போது போலீஸ் டிரெயினிங் பீரியடில் Jungle War Fare-ஐ ஒரு கோர்ஸை வைச்சிருக்காங்க.

கடமையாற்றும்போது இறந்துபோன போலீஸ்காரங்களுக்கு நினைவுச் சின்னம் இருக்கும். அதைக் காட்டலாம்ன்னு நினைத்து தேடிப் பார்த்தேன். அப்படியொண்ணு இல்லவே இல்லையாம். கடைசியா என் படத்துல அதை கிராபிக்ஸ்ல செஞ்சு எனது அஞ்சலியை செலுத்திட்டேன்.

இப்போது இலக்கு படத்தின் ஷூட்டிங் முடிஞ்சு டப்பிங், இசைக்கோர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூலை 2-வது வாரத்தில் இந்த இலக்கு திரைப்படம் தன் இலக்கை எட்டும்..” என்கிறார் நம்பிக்கையோடு.

 

Our Score