உளவியல் ஃபேண்டஸி படமான ‘க்’ டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது..!

உளவியல் ஃபேண்டஸி படமான ‘க்’ டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது..!

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும் திரைப்படம் க்’.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கிறார்கள். மேலும், நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், Y.G.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார்.  பியார் பிரேமா காதல்’ பட புகழ் படத் தொகுப்பாளரான மணிக்குமரன் இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்துள்ளார்.

சிறந்த திரைக்கதைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்ட ஜீவி’ படத்தின் திரைக்கதை ஆசிரியரான பாபு தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புது வகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து,  இத்திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி’ படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமாம்.

முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் இந்த க்’  திரைப்படம் 2021 டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score