அறிமுக இயக்குநர் பாரத் மோகன் இயக்கும் ‘இக்ளூ’ திரைப்படம்..!

அறிமுக இயக்குநர் பாரத் மோகன் இயக்கும் ‘இக்ளூ’ திரைப்படம்..!

படைப்புத் துறையில் புதிய திறமையாளர்களின் வருகை, உண்மையில் சினிமாவுக்கு கற்பனை வளத்தை பாய்ச்சியிருக்கிறது. இயக்குநராகும் கனவோடு வரும் இளம் திறமையாளர்கள் அனைவருக்கும் சினிமா ஒரு திறந்த துறையாக உள்ளது.

இந்தத் துறையில் அனைவரும் மிகவும் நம்பிக்கையோடு பார்க்கிற இளைஞர்களில் ஒருவரான இயக்குநர் பாரத் மோகன், டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘இக்லு’ (IGLOO) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நடிகர் அம்ஜத்கான் மற்றும் அஞ்சு குரியன் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பக்ஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

அரோல் கொரோலி இசையமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பு செய்ய, விஜய ஆதிநாதன் கலை இயக்கத்தை மேற்கொள்ள, செந்தில் குமரன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

இந்த இக்ளூ திரைப்படம் பற்றி படத்தின் இயக்குநரான பாரத் மோகன் பேசுகையில், “இந்த ‘இக்ளூ’ திரைப்படம் நேர்மறையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜோடியைச் சுற்றி நடக்கும் ஒரு வலைப் பின்னல் கதை.

பொதுவாக துருவ நிலையில் வாழும் இக்ளூஸைப் போலத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாதகமான சூழ்நிலையில்தான் நாம் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்கிறோம்.

தரமான வாழ்க்கையின் தேர்வு நேர்மறையான சிந்தனையில்தான் உள்ளது. ஊடகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி. நான் அதிகபட்சமாக அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். டிஜிட்டல் தளங்கள் என்னை போன்றவர்களுக்கு ஒரு ஷோ ரீல் ஆக இருக்கிறது. இந்தத் தளங்களை சரியான முறையில், சரியான காரணத்துக்காக பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

குறிப்பிட்ட காலத்தில் இந்த திரைப்படத்தை ஆரம்பித்து முடிக்க திட்டமிட்டோம். அதை சாதித்தும் விட்டோம். இதை சாத்தியப்படுத்திய எனது திறமையான குழுவினரின் மகத்தான முயற்சிகளுக்கு நன்றி…” என்றார்.

Our Score