நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 3 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு 3 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘லால் சிங் சத்து’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் சமந்தா பற்றி கேள்வியெழுப்பட்டது.
“சமந்தாவை இப்போது நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த நாக சைதன்யா, “ஹாய் சொல்லி அணைத்துக் கொள்வேன்..” என்று பதிலளித்தார்.
மேலும் தனது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவைப் பற்றிப் பேசிய நாக சைதன்யா, “என் கைகளிலுள்ள டாட்டூவைப் போல் எனது ரசிகர்கள் பலர் போட்டிருப்பதை சமீப நாட்கள் நான் பார்க்கிறேன். எனது திருமண நாளைத்தான் நான் டாட்டூவாகப் போட்டிருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போட வேண்டாம். ஏனென்றால் சில விஷயங்கள் வரும் காலத்தில் மாறலாம் இல்லையா. ஏன் நானேகூட இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால் ரசிகர்கள் டாட்டூ போட விரும்பினால் நான் போட்டிருப்பது போன்ற டாட்டூவைத் தேர்வு செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.