‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் இம்மாதம் திரைக்கு வரும் கலகலப்பான காமெடி & ஹாரர் படம் ‘இடியட்.’
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இடியட்’.
‘மிர்ச்சி’ சிவா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஊர்வசி, அக்சரா கவுடா, மயில்சாமி, கருணாகரன், ரவி மரியா, ஆனந்தராஜ், சிங்கம் முத்து, R.N.R.மனோகர், கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம் பாலா இயக்கியுள்ள மூன்றாவது படம் இது.
இயக்கம் – ராம் பாலா, ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜ், இசை – விக்ரம் செல்வா, தயாரிப்பு – ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட், கலை இயக்கம் – வித்தேஷ், படத் தொகுப்பு – மாதவன், ஆடை வடிவமைப்பு – பவான், நிர்வாக தயரிப்பு – சித்தார்த் ரவிபதி, நடனம் – சாண்டி, பாடல் வரிகள் – மணி அமுதவன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத், நிகில் முருகன்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ‘இடியட்’ திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.