கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல் வாண்டையார் தயாரித்திருக்கும் படம் ‘இதயத்திலிருந்து 6 கல்.’
இந்தப் படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதை நாயகனாகவும் ஹாசிகா தத் கதை நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும் நிழல்கள் ரவி, யுவராணி, அஜய் ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்து ரவி, கம்பம் மீனா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார்.
காதல், வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும், பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் கௌஷல்யன்.
கதையின் நாயகனான உதயராஜ் நடிப்பிற்காக படபிடிப்பின் முதல்நாள்வரை எவ்வித சிறிய பயிற்சியையும் எடுத்திருக்காத சூழ்நிலையிலும் அவரை கதைக்கேற்றவாறு சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஹீரோ உதயராஜின் நடிப்பு ஆர்வத்தை பார்த்து உடன் நடித்த நடிகர் நிழல்கள் ரவி டிப்ஸ் கொடுத்து மிகவும் பாராட்டியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் வசன காட்சிகள் கும்பகோணம், மற்றும் பட்டீஸ்வரத்திலும் பாடல் காட்சிகள், இயற்கை எழில் நிறைந்த இடங்களிலும் ஒரே ஷெட்யூலில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
‘இதயத்திலிருந்து 6 கல்’ திரைப்படத்தில் யுகபாரதி எழுதியிருக்கும் ‘அம்மாடி நீ சிரித்தாலே’ என்ற பாடல் கும்கியின் ‘அய்யய்யய்யோ ஆனந்தமே’ வரிசையிலும் ‘குட்டிகுரா போட்டவளே’ பாடல் ‘மன்மதராசா’ மற்றும் ‘ஊதா கலர் ரிப்பன்’ சாதனை வரிசையிலும் ஹிட்டாகும் என்று பாடல் பதிவின்போதும், படப்பிடிப்பின்போதும் தெரிந்துள்ளது. பாடல்கள் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.









