full screen background image

“ரோலக்ஸ் கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன்” – சூர்யா அளித்த உறுதி..!

“ரோலக்ஸ் கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன்” – சூர்யா அளித்த உறுதி..!

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.

“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.

Our Score