இதென்ன விளையாட்டுன்னு தெரியலை.. எவ்ளோ பெரிய கம்பெனி..? இப்படி எல்லா விஷயத்துலேயும் அலட்சியமா இருக்கலாமா..?
‘ஐ’ படத்தின் டிரெயிலரை தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களை அழைத்து போட்டுக் காட்டினார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அப்போது அதை யாரோ ஒருவர் செல்போனில் படமாக்கி யூடியூபில் போட்டுவிட்டதாக ஒரு செய்தி பரபரப்பாகியது.
இப்போது.. பாடல் மட்டும்.. நாளை மறுநாள் இசை வெளியீடு என்று சொல்லிவிட்டு இன்று மாலை 5 மணிக்கு ஒரு யூடியூப் அக்கவுண்ட்டில் ஐ படத்தின் இடம் பெறும் ஒரு பாடலான ‘மெர்சலாயிட்டேன்’ பாடலை லீக் செய்திருக்கிறார்கள்..! அனிருத்தும், நீலி மோகனும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள்.
இது உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்..!