full screen background image

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கம்..!

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கம்..!

நடிகை சமந்தா நடிக்கும் பிரம்மாண்டமான படமான  ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சமந்தா உடன், வரலகஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை – மணிசர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யல‌ஷ்மி, பாடல்கள் –  ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் டைரக்டர் – ஹெமம்பர் ஜஸ்தி, ஒளிப்பதிவு – M.சசிக்குமார், கலை இயக்கம் – அசோக், சண்டை இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்தந்த் K.வெங்கடேஷ், Line Producer – Vidya Sivalenka, இணை தயாரிப்பு – சிண்டா  கோபாலகிருஷ்ணா ரெட்டி, இயக்கம் – ஹரி, ஹரீஷ், தயாரிப்பு – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.

இப்படத்திற்காக கலை இயக்குநர் அசோக்கின் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் பேசும்போது, “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரம்மாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின்  கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில்தான் நடக்கிறது.

இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இது போன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது.

எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம்.

இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என  ஒரு  7  ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது.

பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 6-ம் தேதி முதல் கிறிஸ்மஸ்வரை முதல் கட்ட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது,

எஞ்சியுள்ள முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து, இப்படத்தை  தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

கலை இயக்குநர் அசோக், ‘ஒக்கடு’ படத்தில் பிரம்மாண்ட சார்மினார் செட் மற்றும் பல்வேறு படங்களில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்ததற்காக தெலுங்கு திரையுலகத்தில் பிரபலமானவர். அவர் தெலுங்கு மற்றும் தமிழில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதைக்கு ஏற்ற சிறந்த அரங்குகளை அமைத்து புகழ் பெற்றுள்ளார். இந்த ‘யசோதா’ படத்தின் அரங்கமும் அவரது திறமையை மேலும் சிறக்க செய்வதாக இருக்கும் என்று படக் குழு கூறுகிறது.

Our Score