“ஒரு நாள் இரவுக்கு கட்டணம் எவ்வளவு..?” – கேட்டவருக்கு நெத்தியடி பதில் சொன்ன நடிகை நீலிமா ராணி..!

“ஒரு நாள் இரவுக்கு கட்டணம் எவ்வளவு..?” – கேட்டவருக்கு நெத்தியடி பதில் சொன்ன நடிகை நீலிமா ராணி..!

சமூக வலைத்தளங்களில் பெண்களை அதுவும் நடிகைகளை அவமானகரமாக எழுதுவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

ஏதாவது ஒரு நடிகை ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டால்கூட அவர் மனம் புண்படும்படியான கேள்விகளைக் கேட்பதும், அவர்களை பாலியல் தொழிலோடு சம்பந்தப்படுத்தி பேசுவதும் முகம் தெரியாத அனானிகளின் வேலையாகிவிட்டது.

இப்போது இதில் சிக்கியிருப்பவர் நடிகை நீலிமா ராணி.

சின்னத்திரை உலகின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான நீலிமா ராணி தற்போது பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சீரியல்களைவிடவும் சினிமாக்களில் நடிப்பதையே தற்போது தான் அதிகம் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் ஒரு கேள்வி-பதில் நிகழச்சியில் பேசினார் நடிகை நீலிமா ராணி.

அப்போது திடீரென்று ஒருவர் “ஒரு இரவுக்கு உங்களுடைய கட்டணம் எவ்வளவு..?” என்று கேட்டுவிட்டார். இதைப் பார்த்து நீலிமா ராணி அதிர்ச்சியடைந்தாலும், ஆத்திரப்படாமல் அதே சமயம் காத்திரமாக அந்தக் கேள்வியைக் கேட்டவருக்கு உரைப்பதுபோல பதிலளித்திருக்கிறார்.

நீலிமா ராணி அளித்த பதிலில், “நான் சில கண்ணியமான சகோதரர்களையே இங்கே எதிர்பார்க்கிறேன்..!! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..! மக்களை அவமரியாதையாக பேசுவது வக்கிரமான மனம். தயவு செய்து உடனடியாக ஒரு உளவியலாளரை சந்திக்கவும்.. அந்த உதவி உங்களுக்கு இப்போது தேவைப்படுகிறது..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score