புதுமுக இயக்குநரான தினேஷ் தயாரித்து, இயக்கும் புதிய திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்’.
1970-ல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ, திரில்லர் வகை படமாகும்.
இப்படத்தில் புதுமுகங்களான சந்திப் நாயகனாக நடிக்க நாயகியாக லட்சுமி நடிக்க உள்ளார். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசை – ஜான் பீட்டர், ஒலிப்பதிவு – விவேக், சண்டை பயிற்சி – அலெக்ஸ், நடனப் பயிற்சி இயக்கம் – பிரசன்னா. திரைக்கதை வசனம் – ஆண்டனி.
இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.









