Shutter Frames (சட்டர் பிரேம்ஸ்) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ‘ஹோலோகாஸ்ட்’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷ்யாம் நடித்த காவியன் படத்திற்கு இசையமைத்த ஷ்யாம் மோகன் M. M இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை விபின் ராஜ் செய்துள்ளார். எடிட்டிங் செய்து கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றியுள்ளார் டினோ ஜாய் புத்தெட்டு. ரெஜித் V சந்து நடனம் அமைத்துள்ளார். வசனம் – மனோஜ் குமார். மேக்கப் – ராகேஷ், வினு, சுகுமாரன். புராஜெக்ட் டிசைனராக ஶ்ரீனிவாசன் G D பணியாற்றியுள்ளார். பப்ளிசிட்டி டிசைனர் – இந்திர பிரபாகரன், பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் விஷ்ணு சந்திரன்.
படம் பற்றி இயக்குநர் விஷ்ணு சந்திரன் பேசும்போது, “இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிஸ்டாரிக்கல் ஹரார் திரைப்படம். ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் இதுதான்.
6 நாட்களில் நடக்கும் இந்தக் கதை காஞ்சூரிங், இன்சிடியஸ், ஈவில் டெத் போன்ற படங்கள் வரிசையில் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.
செல்ஃப் கோஸ்டின் ரிவஞ்ச் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் மாதிரியான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
பொதுவாக ஹாரர் படங்கள் எடுக்கும்போது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது எங்கள் படத்திற்கும் நடந்தது.
இந்தக் கதையை எழுத துவங்கியது முதலே நான் பல்வேறு வகையான இடையூறுகளை சந்தித்தேன் அதோடு பெரிய விபத்திற்கும் உள்ளானேன். அதையும் தாண்டி படப்பிடிப்பை துவக்கினோம். ஒரு நாள் இரவு நேர படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் நான் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள் செல்லும்போது மீண்டும் ஒரு விபத்தை சந்தித்தோம்.
இந்த படத்தில் வரும் எலிஷா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அது சம்பந்தமான காட்சிகள் எடுக்கும் போது பலத்த காற்றுடன் மழையும் செய்தது. நிஜமாகவே நாங்கள் ரெயின் எஃபெக்டில்தான் அந்த காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால், போதுமான பட்ஜெட் இல்லாத காரணத்தால் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இன்றுவரை அது மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. இந்த அனுபவத்தை ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் தியேட்டரில் உணர்வார்கள் அப்படி உயிர்ப்போடு இருக்கும் அந்த எலிசா கதாபாத்திரம்.
படப்பிடிப்பு முழுவதையும் கேரளா வாகமனில் நடத்தினோம். படம் ஜூன் 13-ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. ரசிகர்கள் ஒரு புதிய ஹாரர் அனுபவத்திற்கு தயாராக இருங்கள்…” என்றார் இயக்குநர் விஷ்ணு சந்திரன்.