சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.
இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபு சாலமன் –டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ், கலை இயக்குனர் – வைரபாலன், நிர்வாக தயாரிப்பு – ராகுல். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஒரு சிறப்பம்சம், ஹாலிவுட்டின் X Men, Shankai Noon, BatMan Begins, SkyFall போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணிபுரிந்த ரோஜர் யுவான், இப்படத்தின் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிய இருக்கிறார் என்பதுதான்.
அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கமர்சியல் கலந்த ஆக்சன் திரில்லர் படமாக இது உருவாகவுள்ளது.