full screen background image

விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியான வரலாறு..!

விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியான வரலாறு..!

கிட்டத்தட்ட 9 வருஷங்களுக்குப் பிறகு அஜித் – விஜய் படங்கள் 2023-ம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்பு இதேபோல் பல்வேறு தேதிகளில் அஜித் – விஜய் படங்கள் மோதிய லிஸ்ட் இங்கே :

பண்டிகை தின ரிலீஸ் :

கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த ‘ஃபிரண்ட்ஸ்’ படமும், அஜித்தின் ‘தீனா’ படமும் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.

2003-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் அஜித்தின் ‘ஆஞ்நேயா’ மற்றும், விஜய்யின் ‘திருமலை’ படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘திருமலை’ படம் வெற்றி பெற்றது.

4 வருடங்களுக்குப் பிறகு, 2007-ம் ஆண்டு விஜய்யின் ‘போக்கிரி’ மற்றும் அஜித்தின் ‘ஆழ்வார்’ படங்கள் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘போக்கிரி’ படம் வெற்றியடைந்தது.

7 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘வீரம்’ படமும் விஜய்யின் ‘ஜில்லா’ படமும் வெளியானது. இதில் அஜித்தின் ‘வீரம்’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

1996-ம் ஆண்டு விஜய் நடித்த ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் அஜித்தின் ‘வான்மதி’ இரண்டு படங்களும் 3 நாட்கள் வித்தியாசத்தில் வெளியாகின.

1996-ம் ஆண்டு அஜித்தின் ‘வான்மதி’ ஜனவரி 12-ம் தேதியன்றும், ஜனவரி 15-ம் தேதியன்று, விஜய்யின் கோயமுத்தூர் மாப்ளையும், அதே ஆண்டு அதாவது 1996-ம் ஆண்டே பிப்ரவரி மாதம் 18-ம் தேதி விஜய்யின் ‘பூவே உனக்காக’ படமும், அஜித்தின் ‘கல்லூரி வாசல்’ படமும் ஒரே நாளில் வெளியானது.

1997-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படமும், விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ டிசம்பர் 19-ம் தேதியன்றும் வெளியானது.

1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியன்று விஜய் நடித்த ‘நிலவே வா’ படமும், ஆகஸ்ட் 15-ம் தேதியன்று அஜித்தின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படமும் வெளியானது.

2000-ம் ஆண்டு மே 19-ம் தேதி விஜய்யின் ‘குஷி’, அஜித்தின் ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

Our Score