full screen background image

தெலுங்கு நடிகர் நரேஷை செருப்பால் அடிக்கப் பாய்ந்த 3-வது மனைவி..!

தெலுங்கு நடிகர் நரேஷை செருப்பால் அடிக்கப் பாய்ந்த 3-வது மனைவி..!

பிரபல தெலுங்கு நடிகரான நரேஷின் குடும்பப் பிரச்சினை வீதிக்கு வந்துவிட்டது.

தெலுங்குலகின் மறைந்த மூத்த நடிகையும், இயக்குநருமான விஜயநிர்மலாவின் மகனான நரேஷும் தெலுங்கில் பிரபலமான நடிகர். அவருக்கு வயது 60.

இதுவரையிலும் நரேஷ் 3 முறை திருமணம் செய்து அது தோல்வியில் முடிவடைந்தது. 3 திருமணங்களின் மூலமாக நரேஷூக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நரேஷ் சமீப மாதங்களாக கன்னட நடிகையான பவித்ரா லோகேஷூடன் இணைந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பவித்ரா லோகேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து உள்ளார்.

பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். நடிகர் நரேஷின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் நடிகை பவித்ரா லோகேஷ் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டதை மறுத்துள்ளனர். ஏனெனில் இருவருமே இதுவரையிலும் தங்களது ஜோடியை விவகாரத்து செய்யவில்லை என்பதால்தானாம். இருவருமே விவகாரத்து கோரி மனு செய்துள்ளனர். அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைக்கு மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷூடன் வந்து தங்கியிருந்தார். அவர்கள் இந்த ஓட்டலில் தங்கியிருப்பது நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யாவுக்கு தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் ஹோட்டலுக்கு வந்து நரேஷை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் நரேஷ் கதவைத் திறக்காமல் போலீஸுக்கு போன் செய்ய.. போலீஸார் வந்துவிட்டார்கள்.

பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரம்யாவை தடுத்து நிறுத்தினார்கள். உடனேயே கிளம்பும்படி போலீஸார் நரேஷை வற்புறுத்தியதால் நரேஷ்-பவித்ரா லோகேஷூடன் ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வந்தார்.

அப்போது ரம்யா தன் செருப்பை எடுத்து நரேஷை அடிக்கப் பாய்ந்தார். ஆனால் போலீஸார் அதைத் தடுத்துவிட்டார்கள். தொடர்ந்து போர்க் குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரம்யாவைப் பார்த்தது நடிகர் நரேஷ் விசில் அடித்துவிட்டு பவித்ராவுடன் கிளம்பி சென்றார் நரேஷ்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Our Score