full screen background image

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ‘ஐகோர்ட் மகாராஜா’ திரைப்படம்..!

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ‘ஐகோர்ட் மகாராஜா’ திரைப்படம்..!

ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘ஐகோர்ட் மகாராஜா.’ 

இந்தப் படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். மற்றும் மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு. இசை – சாண்டி, பாடல்கள் – சந்துரு, படத் தொகுப்பு – சங்கத் தமிழன், கலை இயக்கம் – ஸ்ரீமன் ராகவன், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நிர்வாக தயாரிப்பு – செல்வகுமார், தயாரிப்பு மேற்பர்வை – முருகபூபதி, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட், எழுத்து, இயக்கம் – எ.பாக்கியராஜ். D.F.T.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் FIRST LOOK POSTER-ஐ வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

Our Score