ஒரே நாளில் ஒரே தலைப்பில் இரண்டு புதிய பட அறிவிப்புகள்..!

ஒரே நாளில் ஒரே தலைப்பில் இரண்டு புதிய பட அறிவிப்புகள்..!

படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ.. படத்தின் தலைப்பை மட்டும் வித்தியாசம், வித்தியாசமாக யோசித்து வைக்கிறார்கள் இயக்குநர்கள்.

இதில் ஒரே தலைப்பை இரு படங்களுக்கு வைத்துவிட்டு “நான்தான் முதலில் வைத்தேன்.” “இல்லை.. நான்தான் வைத்தேன்..” என்று இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்வதும் வாடிக்கை.

இன்றைக்கு அப்படியொரு சம்பவமும் நடந்துள்ளது.

இன்றைக்கு வெளியான இரண்டு புதிய படங்களின் அறிவிப்பில் இருக்கும் சுவாரஸ்யாம்.. இரண்டு புதிய படங்களின் தலைப்பும் ஒன்றுதான். ‘ஹீரோ’. இதுதான் இந்தப் புதிய படங்களின் தலைப்பு.

ஒரு ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 15-வது படமாகும். இந்தப் படத்தை கொடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். ‘இரும்புத் திரை’ படத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன் தயாரிக்கிறார்.

hero-movie-poojai-stills-2

மற்றொரு ‘ஹீரோ’ படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘காக்கா முட்டை’ படத்தின் வசனகர்த்தாவான ஆனந்த் அண்ணாமலை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஏற்கெனவே 1994-ம் ஆண்டு ரகுமான், சுகன்யா நடிப்பில் ‘ஹீரோ’ என்கிற பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகியிருந்தது. இது ஹிந்தி கல்நாயக் படத்தின் தமிழ் ரீமேக். கூடுதலாக இதை தலைப்பில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படங்களும் வெளியாகியுள்ளன.

இருந்தும், இன்று ஒரே நாளில் ஒரே தலைப்பில் எப்படி இரண்டு பேர் தயாரிக்கும் படங்களின் செய்திகள் வெளியானது என்று பத்திரிகையாளர்களுக்கே புரியவில்லை.

இது பற்றிய செய்தியறிந்ததும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் ‘ஹீரோ’ என்ற தலைப்பைப் தாங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.

hero-title-registered-document

இவர்கள் வெளியிட்டிருப்பதைப் பார்த்தால் ’ஹீரோ’ தலைப்பை இவர்கள்தான் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

மேலும் தமிழில் ஏற்கெனவே வெளியான ஒரு படத்தின் தலைப்பை மீண்டும் ஒரு புதிய படத்தின் தலைப்பாக பயன்படுத்துவதற்கு முந்தைய படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி வந்து கொடுத்தால்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைப்பையே பதிவு செய்வார்கள்.

இங்கே இவர்கள் பதவி செய்திருப்பதால் ‘ஹீரோ’ தலைப்பிற்கு தடையில்லா சான்றிதழை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தமாகிறது..!

பின்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு எப்படி ‘ஹீரோ’ என்று பெயர் வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு வேளை இந்தச் சிக்கல் வெளியில் தெரிந்தவுடன், பெயர் மாற்றம் நடந்தாலும் நடக்கலாம்..!

Our Score