full screen background image

ஹீரோயி்னிடம் உதை வாங்கிய ஹீரோ..!

ஹீரோயி்னிடம் உதை வாங்கிய ஹீரோ..!

‘மறுமுகம்’ என்ற படம் எண்டெர்டைன்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரிக்க, கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். அடுத்த வெள்ளிக்கிழமை, மார்ச்-14-ல் படம் ரிலீஸ்.

படத்தின் ரிலீஸ் தேதி மிக நெருங்கிவிட்டதால், படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சில பரபரப்பு விஷயங்களை இப்போது கொஞ்சம், கொஞ்சமாக ரிலீஸ் செய்து வருகிறார்கள் படக் குழுவினர்.

இந்தப் படத்தில் வரும் ‘நீயில்லாத’ என்ற பாடல் காட்சியை ஒரு அருவியில் படமாக்கியிருக்கின்றனர். அப்போது படத்தின் நாயகி ஷில்பி, நாயகன் கிருஷியை எட்டி உதைப்பது போல் செய்ய வேண்டும். இதுதான் காட்சி. ஆனால் இந்தக் காட்சியின்போது நிஜமாகவே நாயகனை, நாயகி எட்டி நெஞ்சில் உதைத்துவிட ஹீரோவான கிருஷிக்கு சட்டென்று கோபமே வந்திருச்சாம்.

சினிமா ஷூட்டிங்ன்னாலும் ச்சும்மா உதைக்கிற மாதிரி காட்ட வேண்டிய சீன்ல நிசமாவே ஹீரோயின் உதைச்சிருச்சேன்னு கோபத்தில் ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டாராம் ஹீரோ. படக் குழுவினர் ஹீரோவிடம் பேசிப் பார்த்ததில் அவருடைய கோபம் தெரிந்தது. தொடர்ந்து ஷூட்டிங் எடுக்க வேண்டியிருந்ததால் வேறு வழியில்லாமல் நாயகியை அணுகி விஷயத்தைச் சொல்லி பிரச்சினையை சுமூகமாக முடிக்கச் சொன்னார்களாம். அதனால் வேறு வழியில்லாமல் ஹீரோயினும் நாயகனைத் தேடிச் சென்று ஸாரி சொன்ன பிறகே ஷாட்டுக்கு வந்தாராம் ஹீரோ.

“முதல் படமென்பதால் கொஞ்சம் டென்ஷனாயிருச்சு. அதான் ஸ்பீடா உதைச்சிட்டேன்.. ஸாரி..” என்றாராம் ஹீரோயின். ஹீரோயினே இறங்கி வந்த பின்னாடி ஹீரோவால இதுக்கு மேல தம் கட்ட முடியுமா..? ஒருவேளை நாளைக்கு இதே ஹீரோயின் அனுஷ்கா மாதிரி வந்துட்டா.. எதுக்கு வம்புன்னு இறங்கி வந்து மிச்சத்தை நடிச்சுக் கொடுத்தாராம் ஹீரோ..!

இவங்களோட இந்த அருவிக் குளியல் நடிப்பை பார்க்கணும்னா நீங்க அவசியம் இந்த லின்க்கை  கிளிக் பண்ணி பார்த்தே ஆகணும்..!

Our Score