full screen background image

கெளதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ஹரிஹர மஹாதேவகி’

கெளதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ஹரிஹர மஹாதேவகி’

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும், ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘S-3’-ன் படபிடிப்பு முடிவடைந்துவிட்டது. வரும் டிசம்பர் 16-ம் தேதி அந்தப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது.

இதே நேரத்தில் அல்லு அர்ஜூனை ஹீரோவாக வைத்து லிங்குசாமியின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது ஸ்டூடியோ கிரீன். ஆனால் அந்தப் படத்திற்கு முன்பேயே ‘சண்டைகோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று லிங்குசாமி சொல்லியிருப்பதால், அல்லு அர்ஜூன் படத்திற்கு நீண்ட நாளாகலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தான் வெளியிடவிருக்கும் அடுத்த படத்தை அறிவித்திருக்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.

harihara-mahadevaki-pooja-1

படத்தின் பெயர் ‘ஹரிஹர மஹாதேவகி’. முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட இருக்கும் இந்தப் படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாகவும், நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மேலும் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கலை – எஸ்.சுரேஷ்குமார்,  தயாரிப்பு நிர்வாகம் – டி.நிர்மல் கண்ணன், புகைப்படம் – டி.நரேந்திரன், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், ஒளிப்பதிவு – எஸ்.கே.செல்வகுமார், இசை – பாலமுரளி பாலு, பாடல்கள் – கே.கார்த்தி, கானா கடல், எழுத்து, இயக்கம் – சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார். தயாரிப்பு – எஸ்.தங்கராஜ்.

இந்தப் படத்திற்கு இன்று மிக எளிமையான முறையில் பூஜை போடப்பட்டது. ஸ்லாப் ஸ்டிக் காமெடியாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.

Our Score