full screen background image

‘ஹரா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கும் நடிகர் மோகன்..!

‘ஹரா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கும் நடிகர் மோகன்..!

கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், இயக்குநர் விஜய்ஸ்ரீயின் இயக்கத்தில், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடித்திருக்கும் புதிய படம் ‘ஹரா.’

லியாண்டர் லீ மார்ட்டி படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர். படத் தொகுப்பை குணா கையாள, படத்தின் பத்திரிகை தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, இந்த ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்று படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச்’, ‘பேட் டச்’ உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ‘ஐ.பி.சி.’ சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

சமீபத்தில் இந்தப் படத்தின் சிறப்புக் காணொலி(கிளிம்ப்ஸ்) சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இதுவரை இல்லாத வகையிலான அதிரடி ஆக்‌ஷனில் மோகன் கலக்கியிருக்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் இதுவரையிலும் 1.70 லட்சம் பார்வகளுக்கு மேல் பெற்றுள்ளது.

ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த ஹரா’ படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், இந்த கிளிம்ப்ஸும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக் குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பும் விரைவில் நடைபெற்று முடியவுள்ளது.

படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய்ஸ்ரீ தலைமையிலான படக் குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

Our Score