பான் இந்தியப் படமாக உருவாகி வரும் ‘ஹனுமான்’ திரைப்படம்

பான் இந்தியப் படமாக உருவாகி வரும் ‘ஹனுமான்’ திரைப்படம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ஹனுமான்’.

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர். 

இளம் நடிகர் தேஜா சஜ்ஜா ஹனுமானாக நடிக்கிறார். ஏற்கெனவே 2 வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் வர்மா இந்தப் படத்தை இயக்குகிறார்.

எழுத்து & இயக்கம் – பிரசாந்த் வர்மா, தயாரிப்பாளர் – K.நிரஞ்சன் ரெட்டி, தயாரிப்பு நிறுவனம் – பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், திரைக்கதை – ஸ்கிரிப்ட்ஸ்வில்லே, ஒளிப்பதிவு – தாசரதி சிவேந்திரா, நிர்வாக தயாரிப்பாளர் – அஸ்ரின் ரெட்டி, லைன் தயாரிப்பாளர் – வெங்கட் குமார் ஜெட்டி. இணை தயாரிப்பாளர் – குஷால் ரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஸ்ரீநாகேந்திரா தங்கலா, மக்கள் தொடர்பு – சதீஷ்(AIM), ஆடை வடிவமைப்பாளர் – லங்கா சந்தோஷி.

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளும் இருக்கும்.

படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கிறது, அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் கொண்ட காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை மிகவும் அருமையாக அமைந்துள்ள முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி இரண்டும் அதிகரித்துள்ளன.

Our Score