full screen background image

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம்

இயக்குநர் ஆர்.கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இணைந்து உருவாக்கிய ‘இவன் தந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக கை கோர்க்கின்றனர்.

இந்தப் புதிய படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் புரொடக்ஷன் நம்பர் 10-ஆக தயாரித்து, இயக்குகிறார்.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் மெட்ரோ’ சிரிஷ், மயில்சாமி, ‘தலைவாசல்’ விஜய், பிரிஜிதா, பவன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார்.

இயக்குநர் – ஆர்.கண்ணன், ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு மூன்று மாதங்களில் முடிவடையும் என்று தயாரிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

  •  
Our Score