‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே இளமை துள்ளும் படமாக ‘ராஜாராணி’ போல் இருக்குமென்று தெரிகிறது.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி-ஹன்ஸிகா ஜோடி போட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ‘எங்கேயும் காதல்’ என்ற பிரபுதேவா இயக்கிய படத்தில் இந்த ஜோடி நடித்திருந்தது. இந்தப் படத்தில் இந்த ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கோ… இல்லையோ.. இது நயன்தாரா நடித்திருக்க வேண்டிய படம் என்பதுதான் கொஞ்சம் சுவாரசியமானது.
படத்தின் இயக்குநர் சமீபத்தில் ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில்தான் இதை பற்றிச் சொல்லியிருக்கிறார்.
”ரவி சாரும் நயன்தாராவும் இப்ப ‘பூலோகம்’ படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அந்தப் பட ஷூட்டிங் பிரேக்ல ரவி இந்தக் கதையை நயன்கிட்ட சொல்லியிருக்கார். அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சுப்போய், ‘நானே நடிக்கிறேன்’னு சொல்லியிருக்காங்க.
அடுத்தடுத்த படங்கள்ல ரவியும் நயன்தாராவும் ஜோடியா நடிச்சா ரிசப்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம். ஆனா, சம்பளம், கால்ஷீட்னு யோசிக்கிறோம்னு நினைச்சுட்டு, ‘இந்தக் கேரக்டர் எனக்காகவே ஃப்ரேம் பண்ண மாதிரி இருக்கு. என் சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைச்சுக்கிறேன்’னு தடாலடியா இறங்கி வந்துட்டாங்க நயன்ஸ். அந்தளவுக்கு அந்த கேரக்டர் அவங்களை இம்ப்ரெஸ் பண்ணிருச்சு.
ஆனா, வித்தியாசமான காம்பினேஷன் வேணும்னுதான் ஹன்சிகாவை ஃபிக்ஸ் பண்ணோம். எங்க சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி. நயன்தாராவை ஈர்த்த இந்தக் கதை, நிச்சயமா எல்லாரையும் ஈர்க்கும்…!” என்று சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்தே ஹன்ஸிகா, நயன்தாராவுக்கு தேங்க்ஸ் சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்..!