full screen background image

அக்சய்குமார் – சைஃப் அலிகான் இணையும் ‘ஹைவான்’ திரைப்படம்!

அக்சய்குமார் – சைஃப் அலிகான் இணையும் ‘ஹைவான்’ திரைப்படம்!
கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைவான்’.
 
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்த ‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்சய் குமார் மற்றும் சைஃப் அலிகான் தங்களது சமூக வலைத்தள பதிவுகளில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர். 
 
பிரியதர்ஷன் இயக்கும் இந்த ‘ஹைவான்’ திரைப்படம் மட்டுமின்றி தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’, யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ மற்றும் ‘கேடி’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். 
 
 
Our Score