சமீபத்தில் பல நடிகர்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்று வருகின்றனர். அதே பாணியில் நடிகர் சாந்தனுவும் களத்தில் இறங்கியிருக்கிறார்.
நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கி இருக்கும் ‘குண்டு மல்லி’ என்று ஆல்பத்தில் நடிகர் சாந்தனுவும் நடித்திருக்கிறார். இந்த ஆல்பத்தில் இவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார்.
இந்த ஆல்பம் பற்றி மகிமா நம்பியார் பேசும்போது, “ஆதவ்வை எனக்கும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும் என்றாலும், அவருக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை இந்த ஆல்பத்தில் நடித்த போதுதான் தெரிந்து கொண்டேன்.
நிச்சயம் அவர் நல்ல தரமான படத்தை விரைவில் இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிப்பார். திரைப்படப் பாடல்களில் நடிக்க நமக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். ஆனால், ஆல்பத்தில் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் காதல் மூடுக்கு வந்துவிட வேண்டும் அப்படிதான் சாந்தனுவை பார்த்ததும் காதல் செய்ய ஆரம்பித்தேன்…” என்றார்.