full screen background image

பிரபுதேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘குலேபகாவலி’

பிரபுதேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘குலேபகாவலி’

K.J.R  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

அதி நவீன தொழில் நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்தின் பாடல் காட்சிக்காக.. 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக ஒரு அரங்கத்தை கலை இயக்குநர் கதிர் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர் ஜானி அவர்களின் நடன இயக்கத்தில் படமாக்கப்பட்டது.

மேலும் படத் தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத் தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் இந்தப் படம் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இத்தனை பொருட்செலவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை தயாரிப்பாளர் K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்.

Our Score