நகைச்சுவை அரசர் கவுண்டமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 49-ஓ படத்தில் மழையை மையமாக வைத்து ஒரு பாடல் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாம்..
மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதை குறிக்கும்வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் இசையமைப்பாளர் கே-வின் இசையில், பாடலாசிரியர் யுகபாரதியின் அருமையான வரிகளை எழுதியிருந்தார். இதனை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘பொண்ணுங்களே இப்படித்தான்’ பாடலை பாடிய ஜெயமுர்த்தியின் குரலில் பதிவு செய்யப்பட்டது.
திரையில் நகைச்சுவை அரசர் கவுண்டமணி விவசாயி போல தோன்றி மழை வேண்டி பாடுகிறாராம். இப்பாடலின் Single track வெளியீடு வரும் மார்ச் 31-ம் தேதி, தனியார் வானொலி நிலையத்தில் நடைபெறவுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடை பெறவுள்ளதாம்.
கவுண்டமணி பாடும் பாடல் வரிகள் இவைகள்தான்..!
அம்மா போல அள்ளித் தரும் மழைதான்,
அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்,
அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா,
எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!!