ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.
ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை – இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பேசும்போது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.










