ரூப் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கிரி மற்றும் அருண்காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு மிக, மிக வித்தியாசமாக ‘கோகோ மாகோ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாரின் உறவினரான ராம்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘இந்த நிலை மாறும்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
நாயகியாக தனுஷா என்னும் புதுமுகம் நடிக்கவிருக்கிறார். மேலும் ஒய்.ஜி.மகேந்திரா, சாம்ஸ், சந்தான பாரதி, டெல்லி கணேஷ், பாண்டு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், படத் தொகுப்பு – வி.எஃப்.எக்ஸ் – வினோத் ஷ்ரிதர், கிராபிக்ஸ் டிஸைன்ஸ் – கோபிநாத், இசை, ஒலிக்கலப்பு, கலர் கிரேடிங், இயக்கம் – அருண் காந்த்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் சிவாஜி புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராம்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும் சிவாஜியின் மகள்கள், மருமகள்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
விழாவில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரா, சாம்ஸ் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது..!