full screen background image

தமிழ்-தெலுங்கு ரசிகர்களின் அமோக ஆதரவு – நெகிழ்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

தமிழ்-தெலுங்கு ரசிகர்களின் அமோக ஆதரவு – நெகிழ்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

இசையமைப்பாளர் ஜிப்ரான் மென்மையான சிரிப்பும், தன்மையான பேச்சை கொண்டவர் சமீபத்தில் தமிழில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’, தெலுங்கில் வெளிவந்த ‘ஜில்’ படங்களின் இசைக்கு ரசிகர்கள் தந்த ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தனது இந்த வெற்றிக்கு துணை நிற்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல தான் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் ஜிப்ரான்.

இது பற்றி அவர் பேசும்போது, “இசை கலை இறைவன் எனக்களித்த வரம். நல்ல இசையால் மக்களை சந்தோஷப்படுத்துவதே எனது முதன்மையான குறிக்கோள். ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘ஜில்’ திரைப்படங்களின் இசைக்கு கிடைத்த அமோக ஆதரவைக் கண்டு நான் மலைத்து போனேன்.

ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவு எனது நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது. மேலும் இசையுலகில் எனக்கிருக்கும் பொறுப்புகளையும் எனக்கு உணர்த்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் என்னை ஆதரித்து உத்வேகம் ஊட்டிய அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் இதயம்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், எனது சகோதரர் அமித் இயக்கியுள்ள ‘இராஜதந்திரம்’ படத்தை வெற்றி படமாய் மாற்றிய ரசிகர்களுக்கும், துணை நின்ற ஊடக துறை நண்பர்களுக்கும் அவரது சார்பாக இத்தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஜிப்ரான் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score