அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்“. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின் சில்வர் ஜூபிலி திரைப்படமாகும்.
ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கேஸண்ட்ரா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் இப்படத்தில் நான்கு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன், இவர்தான் காமெடியன், இவர்தான் ஹீரோயின் என்று எதுவும் கிடையாது. திரைக்கதையில் ஒவ்வொருவரின் பகுதியும் சுவாரசியமாக இருக்கும். ரொமண்டிக் – காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதர்வாவின் ஆசை இதன் மூலம் நிறைவேறி உள்ளது.
முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும், சூரியும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு இப்படத்தில் நான்கடவுள் ராஜேந்திரன், T.சிவா, மயில்சாமி, சோனியா போஸ் வெங்கட், பிக் பிரிண்ட் கார்த்திகேயன், தீனா, லோகேஷ் & கோபி, ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர்.. இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நேகா மாலிக் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – M. ஸ்ரீசரவணன்
இசை – D. இமான்
படத்தொகுப்பு – பிரவீன் K.L
பாடல்கள் – யுகபாரதி
நடனம் – தினேஷ்
சண்டை பயிற்சி –சிறுத்தை K கணேஷ்
கலை –வைரபாலன்
ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி
பி.ஆர்.ஓ – ஜான்சன்
காஸ்ட்யும் டிசைனர் – நித்யா , ரபி , நிரஞ்சினி அகத்தியன்
டிசைன் – பிரத்யூல்
கலரிஸ்ட் – M.ஷண்முகநாதன்
நிர்வாக தயாரிப்பு – திலீபன்.M , செங்கோட்டையன்
பரஞ்ஜோதி , துரைசாமி
லையன் புரட்யூசர் – “ பிக் பிரிண்ட் “ B. கார்த்திகேயன்
இணை தயாரிப்பு – ரகுநாதன்.P.S , R.சந்திர சேகர் , சரவணா குமார்
தயாரிப்பு – T.சிவா