‘கேங்ஸ்டர்-21’ படத்தினை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்..!

‘கேங்ஸ்டர்-21’ படத்தினை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்..!

இன்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ‘ஜூனியர் எம்.ஜி.ஆர்.’ வி.இராமச்சந்திரன் நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கிளாப் அடித்துத்  தொடங்கி வைத்தார்.

A.D.R  புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.என்.வீரப்பன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – பாலாஜி, இசை – விக்ரம், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், கலை இயக்கம் – ஆனந்த், ‘அட்டு ‘படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இணைந்துள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி  எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு இன்று காலை வருகை தந்த உலக நாயகன்’ கமல்ஹாசன், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ‘கேங்ஸ்டர்-21’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். கூடவே, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார்.

‘ஜூனியர் எம்.ஜி.ஆர்.’ வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை ‘உலக நாயகன்’ தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக் குழு.

Our Score