பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.’
இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக், இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்(பக்ஸ்), ஈ.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார், தயாரிப்பு நிறுவனம் – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், இசை – ஹரி டஃபுசியா, இசை (OST) – ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – கார்த்திக் K.தில்லை, படத் தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன், சிவா, சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன், நடன இயக்கம் – சாண்டி, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்.
சென்ற ஆண்டு வெளியாகி பலரின் பாரட்டைப் பெற்ற ‘மாயவன்’ திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.
தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளே இந்த ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் கதைக் கரு.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்கான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.