நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் காமெடி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’.
ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பரத்துடன் நந்திதா, தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர், ‘சூது கவ்வும்’ கருணா, மதன் பாப், சாம்ஸ், பாண்டு, சிங்கம்புலி, படவா கோபி, அன்பு, விமல், கோவை செந்தில், சுப்புராஜ், கோமல்குமார், கொட்டாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தை டைரக்டர் செய்கிறார் எல்.ஜி. ரவிசந்தர்.
இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமாக இசையமைத்துள்ளார் ‘555’ பட இசையமைப்பாளரான சைமன்.
இப்படத்தில் கானாபாலா எழுதிய ஒரு பாடலுக்கு தமிழுக்கு இதுவரையில் அறிமுகமே இல்லாத ஒரு பாடகர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று இசையமைப்பாளர் சைமன் விரும்பினார். எனவே, காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ(YABAMA JO) வை அழைத்து வந்து ‘ஏழரை’ என்று துவங்கும் அந்தப் பாடலை பாட வைத்துள்ளார். இப்பாடல் அனைவரையும் ஆடவும் வைக்கும் என்று உறுதியுடன் நம்புகிறது படக்குழு. இசைப் பிரியர்களுக்கு இப்பாடல் ஒரு புதுமையான கொண்டாட்டமாக இருக்குமாம்.
அதுபோல யுகபாரதி எழுதிய ‘ஒண்ணுன்னா ரெண்டு’ என்ற பாடலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பாடியுள்ளாராம்.
இப்போ தமிழ்ச் சினிமால வாயுள்ள எல்லோருமே பாட ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கு.. இது எங்க போய் முடியுமோ..?