2017-ல் வெளிவந்த ‘விக்ரம் வேதா’, 2018-ல் வெளிவந்த ‘தமிழ்ப்படம்-2’ ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியுள்ளது.
இத்திரைப்படத்தில் இந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கை கோர்த்து தயாரிப்புப் பணியில் இறங்கியுள்ளது.
‘கேம் ஓவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது.
படத்தில் நடிகை டாப்ஸி நாயகியாக நடிக்கவுள்ளார். ‘மாயா’ சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார்.
இயக்குநர் – அஸ்வின் சரவணன், தயாரிப்பு – எஸ்.சசிகாந்த், இணை தயாரிப்பு – சக்கரவர்த்தி ராமச்சந்திரா, எழுத்து – அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், ஒளிப்பதிவு – ஏ.வசந்த், கலை இயக்கம் – சிவசங்கர், உடைகள் வடிவமைப்பு – என்.கே.நந்தினி, சண்டை இயக்கம் – ரியல் சதீஷ், இசை – ரான் எதன் யோகனன், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில்ஸ் – எம்.எஸ்.ஆனந்தன், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, மக்கள் தொடர்பு – நிகில், கள தயாரிப்பு – முத்துராமலிங்கம், நிர்வாகத் தயாரிப்பு – ரங்கராஜ், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் – அக்சல் மீடியா, வி.எஃப்.எக்ஸ். தயாரிப்பு – ஓ.கே.விஜய், ஒய்.நாட். ஸ்டூடியோஸ் டீம், விநியோகத் தலைமை – கிஷோர் தல்லூர், வியாபாரத் தலைமை – பிரணவ் ராஜ்குமார்.
‘கேம் ஓவர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.