பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.
இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தை நேற்று துவக்கியுள்ளார்கள்.
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இசை – சி.சத்யா. மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இயக்குநர் எழிலின் திரைப்படங்கள் எப்படி கமர்ஷியல் அடிப்படையில் காதலும், காமெடியும் கலந்து இருக்குமோ.. அதுபோலவேதான் இத்திரைப்படமும் இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர்.
இந்தப் புதிய படத்தின் துவக்க விழா நேற்று மிக எளிமையாக ஒரு கோயிலில் நடைபெற்றது.
அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.