full screen background image

மூன்று நாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘FIR’ திரைப்படம்

மூன்று நாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘FIR’ திரைப்படம்

‘அடங்க மறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களை தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.’

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் அமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, R.N.R. மனோகர், ஷப்பீர், கெளரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன் K.நாயர், பிரஷாந்த், வினோத் கைலாஷ், R.ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

FIR Movie Pooja Photos (31)

தயாரிப்பாளர் – ஆனந்த் ஜாய், இயக்குநர் – மனு ஆனந்த், ஒளிப்பதிவு – அருள் வின்சென்ட், படத் தொகுப்பு – G.K.பிரசன்னா, இசை – அஷ்வத், நிர்வாக தயாரிப்பாளர் – ஷ்ராவந்தி சாய்நாத், பாடல்கள் – எல்.கருணாகரன், மஷூக் ரஹ்மான், பகவதி, ஸ்கிரிப்ட் ஆலோசனை – திவ்யாங்கா ஆனந்த் ஷங்கர், தயாரிப்பு நிர்வாகம் – ராஜூ வேலாயுதம், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – இந்துலால் கவீத், ஸ்டைலிஸ்ட் – பூர்த்தி பிரவின், விஎஃப்எக்ஸ் (ஜெமினி) – ஹரிஹரசுதன், எஸ்.எஃப்.எக்ஸ் – எஸ்.அழகியகூத்தன், பின்னணி குரல் ஒருங்கிணைப்பு – ஹஃபீஸ், ஒலி கலப்பு – சுரேன்.ஜி., இணையதள விளம்பரங்கள் – ஷ்யாம், போஸ்டர் வடிவமைப்பு – ப்ராதூல் N.T.. மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’  உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள்  தலைமை இணை இயக்குநர் – நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

FIR Movie Pooja Stills (23)

இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் படமாகிறது.

இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.

Our Score