21-02-2014
இன்றைய வெள்ளிக்கிழமையில் 6 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கிலப் படமும் ரிலீஸாகவுள்ளன.
1. பிரம்மன்
கே.மஞ்சு சினிமாஸ் நிறுவனமும் அண்டோ ஜோஸப் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளன. கன்னட தயாரிப்பாளர் மஞ்சு நேரடியாகத் தயாரிக்கும் முதல் படம் இதுதான்.. இதில் ச்சிகுமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். லாவண்யா ஹீரோயின். மேலும் நவீன் சந்திரா, சூரி ஆகியோரும் நடிச்சிருக்காங்க. ஜோமோன் டி.ஜான் மற்றும் பைசல் அலி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இசையமைச்சிருக்காரு. ராஜாமுகமது எடிட்டிங் செஞ்சிருக்காரு. தாமரை, நா.முத்துக்குமார், விவேகா, யுகபாரதி நால்வரும் பாடல்களை எழுதியிருக்காங்க. சாக்ரடீஸ் எழுதி, இயக்கியிருக்காரு. இதுதான் இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் துவங்கி 3 வருஷம் கழிச்சுத்தான் இன்றைக்கு ரிலீஸாகிறது.. இந்தப் படத்தின் மீதான நம்பிக்கையால் தயாரிப்பாளர் தமிழ்நாடு முழுவதும் சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறார். மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை ஹீரோ சசிகுமாரே வாங்கியிருக்கிறாராம்.
2. சித்திரை திங்கள்
மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அஸ்வந்த், தீரன், ஸ்ரீரேகா, ஸ்வாதி, ராஜானந்த், நெல்லை சிவா நடிச்சிருக்காங்க. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்காரு ஆர். மாணிக்கம்.
காதலுக்கு 100 வருடங்கள் ஆயுள். ஆனால் காமத்துக்கு ஐந்தே நிமிடங்கள்தான் . ஐம்பது வருடங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையை, ஐந்தே நிமிடங்களில் வாழ்ந்து முடித்துவிட்டேன். உன்னால் என்ன செய்ய முடியும்.. என்று ஆணவத்தில் பேசும் ஒருவன் அதே ஐந்து நிமிடங்களால் தன் வாழ்க்கையை இழந்துவிடும் சூழல் வருகிறது. இதுதான் படத்தோட கதையாம்.
3. வெண்மேகம்
சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் சார்பாக இரட்டையர் சகோதரிகளான சுஜாதா-சுனிதாதயாரிச்சிருக்கும் இந்தப் படத்தை இவர்களின் கணவர்மார்களான இரட்டையர்கள் ராம்-லஷ்மண் இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
விதார்த், நண்டு ஜெகன், இஷாரா, ஜெயஸ்ரீ சிவதாஸ், ரோகிணி, மஞ்சரி ஆகியோர் நடிச்சிருக்காங்க. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய.. ஜாபர் ஹனி இசையமைச்சிருக்காரு. பாடல்களை சு.செந்தில்குமரன், தோழன், தனபால் ஆகியோர் எழுத.. வசனத்தை சீனு ஆர்.வாசன் எழுதியிருக்கார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்கள் ராம்லஷ்மண் இரட்டையர்கள்.
சமீப காலமாக பரவி வரும் ஒரு வினோதமான கரு திருட்டு பிரசவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
4. ஆஹா கல்யாணம்
இந்தியில் வெளியான ‘பேண்ட் பஜா பாரட்’ படத்தை, தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். நானி, வாணி கபூர், சிம்ரன் நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தனின் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் இயக்கி உள்ளார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
5. கிரின் மூன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு எழுதி, இயக்கியிருக்கும் ‘நிலா காய்கிறது’ என்ற நேரடி தமிழ்ப் படமும் ரிலீஸாகிறது.
6. சாந்த துர்க்கை அம்மன் மூவிஸ் சார்பில் கே.உமா சித்ரா எழுதி இயக்கியிருக்கும் மனைவி அமைவதெல்லாம் என்ற நேரடி தமிழ்ப் படமும் இன்று ரிலீஸாகிறது.
7. ‘பாம்பாய்’ என்ற ஆங்கிலப் படம் 3-டி வடிவில் தமிழ் டப்பிங் படமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது.