full screen background image

‘லைகர்’ படத்தைக் கிண்டல் செய்ததற்காக நடிகை அனுசூயாவை ‘ஆண்ட்டி’யாக்கிய ரசிகர்கள்..!

‘லைகர்’ படத்தைக் கிண்டல் செய்ததற்காக நடிகை அனுசூயாவை ‘ஆண்ட்டி’யாக்கிய ரசிகர்கள்..!

லைகர் படத்தைக் கலாய்த்ததற்காக தெலுங்குலகின் பிரபல தொகுப்பாளினியும், ‘புஷ்பா’ பட  நடிகையுமான அனசுயா பரத்வாஜை விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஆண்ட்டி’ என்று அழைத்து பதில் கலாய்ப்பு செய்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா நடித்து, இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘லைகர்’ படம் நேற்று வெளியானது. முதல் காட்சியில் இருந்தே இந்தப் படம் மோசமான விமர்சனங்களைத்தான் பெற்று வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த படம் குறித்து மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை அனசூயாவும் இந்தப் படத்தை விமர்சித்து ட்வீட் செய்தார். இதனால், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் கோபமாகி, அனசூயாவுக்கு எதிராக அவரின் வயதை குறிப்பிட்டு ‘ஆன்ட்டி’ என கூறி டிவிட்டரில் கலாய்க்க துவங்கினர். இதனால் ‘#Aunty’ என்கிற ஹாஷ்டேக்கும் நேற்றைக்கு டிவிட்டர் கிரவுண்ட்டில் ட்ரெண்ட் ஆகியது.

இதனால் கோபமான நடிகை அனுசுயா  ‘என்னை அவமானப்படுத்திய வார்த்தைகளை உங்கள் ஹீரோவுக்கு அனுப்புங்கள்’ என்று கமெண்ட் போட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினார். இதனால், அனசூயா மீதான ட்ரோலிங் நிற்காமல் மேலும், மேலும் உயர்ந்தது.

“இப்படி என்னை தொடர்ந்து ட்ரோல் செய்பவர்களின் ட்விட்டர் பதிவை,  ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். என் வயதை குறிப்பிட்டு, என்னை ‘ஆன்ட்டி’ என்று அழைப்பவர்கள்  அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்வேன். இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை…” என்று உச்சக்கட்ட கோபத்தில் டிவீட் செய்தார் அனுசுயா.

ஆனாலும் இதையும் கண்டு கொள்ளாத விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் இன்னும் ஆவேசமாய் இணையத்தில் அனுசுயாவைத் தாக்கி வருகிறார்கள்.

Our Score