full screen background image

கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘எப்போதும் ராஜா’ திரைப்படம்!

கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘எப்போதும் ராஜா’ திரைப்படம்!

கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எப்போதும் ராஜா பாகம்-1′.

இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கிறார் ‘வின் ஸ்டார்’ விஜய்.

மேலும் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா, டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நாயகன் ‘வின் ஸ்டார்’ தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள், நகைச்சுவை, செண்டிமெண்ட், பாசம் என்று ஜனரஞ்சகமான படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 

இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த ‘எப்போதும் ராஜா பாகம்-1’ படம் குறித்து தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ‘வின் ஸ்டார்’ விஜய் பேசும்போது, “இந்தப் படத்திற்கு தணிக்கையில் 27 கட்டுகள் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் கைப்பந்து விளையாட்டை கதைக் களமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமான ஒரு மனிதன் கைப்பந்து விளையாட்டில் சாதனை படைக்க போராடுவதுதான் இந்தப் படத்தின் கதை. தமிழ்நாடு வாலிபால் அணியில் இணைந்து விளையாடி, அகில இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறார் நாயகன். இதில் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை..” என்றார்.

இந்தப் படம் உலகமெங்கும் வரும் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

Our Score