ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘என்னோடு விளையாடு’.
காதல் படத்தின் மூலம் நம் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவே ஆகிவிட்ட சின்ன தளபதி பரத்தும், மத யானைக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி கிருமி வரை மிக வேகமாக வளர்ந்து வரும் கதிரும் ’என்னோடு விளையாடு’ படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜே.பி, கமலா தியேட்டர் கணேஷ், வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஒளிப்பதிவு- யுவா, எடிட்டிங்- கோபி கிருஷ்ணா, இசை- சுதர்சன்.எம் குமார் & ஏ.மோசேஸ், பாடல்கள்- விவேகா, சாரதி, அருண்ராஜா காமராஜ், கதிர்மொழி ஆக்ஷன்-ஓம் பிரகாஷ், நடனம்-விஜிசதீஷ், கலை-சுப்பு அழகப்பன், எழுத்து, இயக்கம்- அருண் கிருஷ்ணசுவாமி, தயாரிப்பு – ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ்.
சில படங்கள் காஸ்டிங் எனப்படும் இணைந்து நடிக்கும் நடிக, நடிகைகளாலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கும். சில படங்கள் அதன் கதைக் களத்தை கொண்டே எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் மிக மிக சில படங்களே இரண்டுமே சிறப்பாக அமைந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த படங்கள் வரிசையில் அமைந்துவிட்டது ’என்னோடு விளையாடு’ படம்.
தமிழில் ‘கேம்லிங்’ என்ற பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட களம் அரிதாகத்தான் அமையும். அதிலும் இதுவரை யாரும் தொட்டிராத குதிரைப் பந்தயத்தை கதைக் களமாக கொண்டுள்ளது ‘என்னோடு விளையாடு’ படம்.
குதிரைப் பந்தயத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள, எந்த பொறுப்புமே இல்லாத ஒரு இளைஞனும், பொறுப்புள்ள ஒரு ஐ.டி. இளைஞனும் ஒரு பிரச்னையில் சந்திக்க வேண்டியதாகிறது. அதன் பின் அவர்கள் இருவரது வாழ்க்கையும் எப்படி தடம் புரள்கிறது என்பதே இந்த ‘என்னோடு விளையாடு’ படத்தின் கதை.
சமீபகால படங்களில் இல்லாத அளவுக்கு கடைசி முப்பது நிமிடங்கள் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி.
இவ்வளவு எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ‘என்னோடு விளையாடு’ படத்தின் இசை வெளியீடு நவம்பர் முதல் வாரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.