full screen background image

மொத்தம் 8. தியேட்டர்ல ஓடுனது 1. தியேட்டரைவிட்டு ஓடினது 7. – இசையமைப்பாளர் பிரேம்ஜி சொல்லும் கணக்கு..!

மொத்தம் 8. தியேட்டர்ல ஓடுனது 1. தியேட்டரைவிட்டு ஓடினது 7. – இசையமைப்பாளர் பிரேம்ஜி சொல்லும் கணக்கு..!

சென்ற வாரம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தின் சக்ஸஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தன்னுடைய முதல் தயாரிப்பே வெற்றி பெற்றிருப்பதால் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜய் வசந்தின் சகோதரருமான வினோத்குமார் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

ஹீரோ விஜய் வசந்த், ஹீரோயின் மஹிமா, படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தின் இயக்குநர் ராஜபாண்டி இவர்களடங்கிய டீம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

துவக்கத்தில் வழக்கம்போல ‘நீங்கள் இல்லையேல் இந்தப் படத்தின் சக்ஸஸ் இல்லை’ என்று ‘பல்லவி’ பாடினார்கள்.. ‘படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம்’ என்று அனைவருமே இஷ்டப்பட்டு கோரஸ் பாடினார்கள். சீக்கிரமா நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஓடணும்னு முடிவு பணணிட்டே வந்ததால, அதிகப்பட்சம் எல்லாரும் 2 நிமிடங்கள்தான் பேசினாங்க. எடிட்டர் மட்டும்தான் 3 நிமிஷம் பேசிட்டாரு..

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியபோது, நான் இசையமைக்கும் எட்டாவது படம் இது. இதுக்கு முன்னாடி 5 தமிழ்ப் படங்களுக்கு இசையமைச்சிருக்கேன். ஆனா எந்தப் படமும் ஒரு வாரத்துக்கு மேல ஓடலை. அதுனால என் பேர் இசையமைப்பாளரா பிரபலமாகலை. அப்புறம் தெலுங்குல ஒண்ணு.. கன்னடத்துல ஒரு படத்துக்கும் இசையமைச்சேன். அதுவும் சரியாப் போகலை.. இப்போ இந்த ஒரு படத்து மூலமாத்தான் நான் மக்கள்கிட்ட ரீச்சாகியிருக்கேன். அதுக்காக இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன்.

நான் நல்லா இசையமைச்சு அதுனால இந்தப் படம் இந்த அளவுக்கு சக்ஸஸா போகுதன்றதால, இனி அடுத்தடுத்து இந்தக் கம்பெனி எடுக்குற படங்களுக்கும், விஜய் வசந்த் நடிக்கப் போற படங்களுக்கும் என்னையவே இசையமைப்பாளரா புக் செய்யப் போறதா விஜய்யே என்கிட்ட சொல்லியருக்கார். அதை அவர் காப்பாத்துவாருன்னு நம்புறேன்..” என்றார்.

படத்தின் இயக்குநர் ராஜபாண்டி பேசும்போது, திரைக்கதை செய்யும்போது மிகவும் முனைப்புடன் செயல்பட்டதாகவும், அதனாலேயே படம் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

படத்தோட ஹீரோவான விஜய்வசந்தோ.. “இந்தப் படத்தோட ஸ்டண்ட் காட்சிகள்ல நடிக்கத்தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. சண்டை போடவே தெரியாது.. ஆனால் தெரிஞ்ச மாதிரி பாவ்லா காட்டி ஏதோ மாஸ்டரை வைச்சுச் சமாளிச்சிட்டேன். இனிமேல் அடுத்தடுத்த படங்கள்ல சீரியஸா இதுக்கு பிராக்டீஸ் பண்ணி செய்வேன்..” என்றார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ஹீரோயின் மஹிமாவிடம் அவரது அம்மாவை காட்டி, “யார் இது உங்க அக்காவா…?” என்று கேட்டு பத்திரிகையுலக அன்பர்கள் ராகிங் செய்தது இன்னொரு சுவாரஸ்யம்..!

Our Score