கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’ படத்திற்கு சென்சாரில் யு சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ்ச் சினிமாவுலகில் நீண்ட வருடங்களாக அவுட்டோர் யூனிட் தொழில் செய்து வரும் ரவிபிரசாத் அவுட்டோர் யூனிட் தனது தயாரிப்புப் பிரிவான ரவிசங்கர் புரொடெக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது.
இந்தப் படம் தெலுங்கில் நானி, நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ALA MODALAINDI’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் கெளதம் கார்த்திக், ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார். பிரியதர்ஷனிடம் இயக்கம் பயின்ற ரவி தியாகராஜன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
வரும் மார்ச் 28-ம் தேதி ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யு சர்டிபிகேட் கிடைத்துள்ளதாம். உலகம் முழுவதும் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.