‘தல’ அஜீத் ரசிகர்களுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் சோகமான விஷயம், ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போகிறது என்பதுதான்..!
ஒரு பாடல் காட்சியைப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் படக் குழுவினர். இந்த வாரமே படமாக்கியிருக்க வேண்டியது. கெளதமுக்கும், அஜீத்திற்கும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷூட்டிங் நின்றுபோக.. இப்போது படமும் தள்ளிப் போகும் சூழலாம்..!
இனிமேல் ஷூட் செய்து எடிட் செய்து கரெக்ஷன் செய்து அதனை ஜனவரி 15-க்குள் தியேட்டருக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்று முடிவு கட்டிவிட்டார்கள். ஜனவரி 15-க்கு பதிலாக ஜனவரி 29-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பொங்கல் தினத்தின் தியேட்டர்கள் கிடைக்காமல் ‘காக்கிசட்டை’ ஜனவரி 26-க்கு தள்ளிப் போனது. இப்போது பேக் டூ தி பெவிலியனாக ‘காக்கிசட்டை’ பொங்கலுக்கே வரலாம். ‘ஆம்பள’ படமும், சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படமும் பொங்கல் ரேஸில் நிற்கிறார்கள். இதனால் ‘ஐ’ படமும் ஜனவரி 14-ம் தேதி ரிலீஸாகிறதாம். 15-ம் தேதி ‘ஆம்பள’ ரிலீஸ் என்று உறுதியாக நம்புகிறார்கள் கோடம்பாக்கத்து புள்ளி விவரக்காரர்கள்.