full screen background image

புத்தாண்டு நள்ளிரவில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு..

புத்தாண்டு நள்ளிரவில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு..

தல அஜித்தின் ரசிகர்களுக்கு வரும் புத்தாண்டு டபுள் ட்ரீட்மெண்ட்டாக கிடைக்கவிருக்கிறது.

பொங்கல் ரிலீஸாக வரவுள்ள என்னை அறிந்தால் படத்தின் இசையை தற்போதைய டிரெண்ட்டின்படி வரும் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

தல அஜீத் சமீப காலமாக எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார். அவர் இல்லாமல் அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வி.ஐ.பி.க்கள் வரவும் தயங்குகிறார்களாம். சிலர் கேள்வியே கேட்கிறார்களாம்..

எதற்கு வம்பு என்று நினைத்தவர்கள் டீசர், டிரெயிலர்களை இணையத்தளங்களிலேயே வெளியிடுவதை போல இசையையும் வெளியிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்..

தல நேரில் வந்தாலென்ன..? வராட்டால்தான் என்ன..? ஸ்கிரீனில் பார்த்தாலே போதம் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்..!

Our Score