full screen background image

“திடீர் திடீர்ன்னு ரிஸ்க் எடுத்து பீதியை கிளப்புவார் ‘தல…” – அலறும் ஸ்டண்ட் இயக்குநர் சில்வா..!

“திடீர் திடீர்ன்னு ரிஸ்க் எடுத்து பீதியை கிளப்புவார் ‘தல…” –  அலறும் ஸ்டண்ட் இயக்குநர் சில்வா..!

‘மங்காத்தா’, ‘வீரம்’, தற்போது ‘என்னை அறிந்தால்’ என வரிசையாய் ‘தல’ படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’ சில்வா.

அவரிடத்தில் ஒரு மின்னல் வேகப் பேட்டி.  

கேள்வி :  தொடர்ந்து ‘தல’ படங்களில் பணியாற்றுவதன் ரகசியம் என்ன?

ஸ்டண்ட் சில்வா பதில் : அது எனக்கு தெரியலங்க. இயக்குநர் வெங்கட்பிரபுதான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘மங்காத்தால’ வொர்க் பண்ணினேன். அந்தப் படத்தோட சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார்கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் ‘வீரம்’ கிடைத்தது. அதில் ரயில் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அதே கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம் சார். அவருடனும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித் சாருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்…

கேள்வி :  ‘வீரம்’ ரயில் சண்டைக் காட்சி மாதிரி ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஷ்பெஷல் ஏதும் உள்ளதா?

ஸ்டண்ட் சில்வா பதில் : அனைத்து சண்டை காட்சிகளையும் ‘Live’-ஆக இருப்பதுபோல செய்திருக்கிறோம். அஜித் சார் அப்பப்போ எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார். இது மாதிரி இன்னும் சில விஷயங்கள் இருக்கு..

கேள்வி : எல்லா ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் தங்களது பெயர் சொல்லும்படியான ஒரு முத்திரையை ஏதாவது ஒரு படத்திலாவது பதிக்க வீண்டும் என்ற ஆசை இருக்கும்.. உங்களுக்கு என்ன மாதிரி ஆசை?

ஸ்டண்ட் சில்வா பதில் : எனக்கு தனியாக எந்த ஆசையுமில்லை. கதையை மீறாமல், கதாபாத்திரத்தின் எல்லைகளை மீறாமல் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேள்வி :  ‘தல’ கூட  ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?

ஸ்டண்ட் சில்வா பதில் : அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  அவரது விடாமுயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூற மாட்டார். சென்னைல நிறைய ஷூட் பண்ணினோம். எல்லாரிடமும் அக்கறையாக இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்றெல்லாம் பார்க்காமல் உடனேயே  ‘Sorry’  கேட்டு விடுவார். sorry மற்றும் Thanks இவையிரண்டும் மனிதனின் Ego-வை குறைத்துவிடும் என்று அடிக்கடி கூறுவார்.

கேள்வி : ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழ்ப் படங்களில் வேலை செய்கிறார்கள். அது பற்றி…

ஸ்டண்ட் சில்வா பதில் : அது ஆரோக்கியமான விஷயம்தான். அவர்களது ‘Work Style‘ வேற மாதிரி இருக்கும். முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு வேலை செய்வார்கள். எல்லா வகையிலும் பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்துவிட்டுத்தான் வேலையையே தொடங்குவார்கள்.

எப்படி ‘On-Spot’ல திட்டமிடுகிறீர்கள் என்று அவர்கள் நம்மை பார்த்து கேட்பதுண்டு. ஹாலிவுட், பாலிவுட் என்று நமது ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்.

Our Score