full screen background image

‘எண்-6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது!

‘எண்-6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது!

Pss புரோடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘எண்-6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ திரைப்படம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தினை ‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’, ‘வில் வித்தை’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநரான செ.ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சரத் அறிமுக கதாநாயகனாகவும், அயிரா கதாநாயகியாகவும் கஞ்சா கருப்பு அருவி மதன் மற்றும் சோனா ஹைடன், நரேன், இளையா, எஸ்.எம்.டி.கருணாநிதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வினோத் ராஜா, இசை – AJ Alimirzaq, படத் தொகுப்பு -கிஷோர், பாடல்கள் –  வித்யாசாகர்(குவைத்), பா. இனியவன், செ. ஹரி உத்ரா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.

கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக் கருவாக ஆழமாக இயக்குநர் பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படம் பரமக்குடி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நிஜமான கால்பந்து விளையாட்டு வீரர்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் இரவு நேர காட்சிகள் சுமார் 30 நாட்களுக்கும் மேலாக பரமக்குடியை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர். படத்தின் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Our Score